கேரளாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு பள்ளி அனுமதி மறுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பேசுபொருளாக இருக்கும் நிலையில் , மற்றொரு பள்ளி சபரிமலைக்கு விரதமிருக்கும் மாணவரின் கறுப்பு ஆடை அணிய வேண்டும் வேண்டுகோளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என்பதும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் முஸ்லிம் சமூக நிர்வாகத்தால் நடத்தப்படும் Maulana English School-இல் இச்சம்பவம் நடந்துள்ளது என்பதால், மதஒற்றுமை, சமத்துவம், கல்வி நிறுவனங்களின் உடை நெறிமுறைகள் குறித்து பல்வேறு கோணங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் மவுலவி அப்துல் பாசித் தன் முகநூல் பதிவில் இந்த அனுமதி பள்ளியின் மதஒற்றுமை நெறிமுறையைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.








