• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிலக்கரியை காணவில்லை… அதிமுக தலையில் அடுத்த குண்டைப் போட்ட செந்தில் பாலாஜி!..

By

Aug 20, 2021
Senthil balaji

கடந்த காலம் போல் இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது. ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னை அனல்மின் நிலையம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து இயங்கி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை. கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.