சிங்கப் பெண்ணே சீரியல் மூலம் பிரபலமான நடிகை நிவேதா ரவி.
பல வருடங்களாக காதலித்து கரம்பிடிக்க போகும் இயக்குனர் நிவாஸ் சண்முகம் அவருடைய கனவை நிறைவேற்ற நடிப்பிலும், தயாரிப்பாளராகவும், உருவெடுத்துள்ளார்.

ஹாப்பி எண்டிங்- பைலட் பிலிம் என்ற தலைப்பில் சுவாரசியமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல குணச்சித்திர நடிகை ரமா நடித்துள்ளார்.

இந் நிகழ்ச்சியில் பேசிய சீரியல் நடிகை நிவேதா ரவி, பத்து வருடங்களாக எனக்கு தெரியும் தொர்ச்சியா போராடிட்டே இருந்தாரு, இந்த ஹாப்பி எண்டிங் கதையை ஒரு வருடமா என்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு, ஒரு பெரிய படமா எடுக்குற அளவுக்கு தயார் பண்ணிட்டாரு, அவருக்காக நானே இந்த பைலட் பிலிம்யை தயாரிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன், இயக்கம் நிவாஸ் சண்முகம்னு அவரோட பெயர் வரும் போது என்னோட கண்ணே கலங்கிடுச்சு, அவரோட திறமைக்கு விரைவில் பெரிய படமா எடுப்பாரு மிக பெரிய இயக்குனரா வருவாரு என்று கண்கலங்கி பேசினார்.
ஒளிப்பதிவாளர் சக்தி, படத்தொகுப்பு அசோக் அய்யப்பன், இசை எம்.எஸ் லாம்ப், பணிகளை மேற் கொண்டுள்ளனர். ஹாப்பி எண்டிங் பைலட் பிலிம் விரைவில் ஓடிடி தளத்தில் வரவுள்ளது.
