டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் 7 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், அரியானாவில் 10 தொகுதிகளிலும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளிலும், ஒடிசாவில் 6 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியது
