திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் மாநாடு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கான விளக்கத்தை தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் திருமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தவெக நிர்வாகிகளுடன் வந்திருந்த தமிழக வெற்றி கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி வாகனங்கள் செல்லும் வழிப்பாதைகள் தொடர்பாகவும், மாநாட்டிற்கு வரக்கூடிய தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் ,மற்றும் எங்கெங்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மருத்துவ வசதிகள் ஏற்பாடு குறித்த காவல்துறையின் சில சந்தேகங்களுக்கு இன்று மீண்டும் ஏ எஸ் பி அலுவலகம் வந்த ஆனந்த் அதற்குரிய விளக்கத்தை திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுல் நாகரிடம் ஆனந்த் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தவர்களை சந்தித்த ஆனந்திடம் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். தொடர்ந்து தேதி மாற்றிய தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.