ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை என தூய்மை பணியாளர்களுக்கு அனைவருக்கும் அசைவ விருந்து அளித்து வேட்டி சேலையும் ரொக்க பணமும் வழங்கினார்

இன்று தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது பிறந்தநாளை ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரிந்த 120க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரொக்க பணம் மற்றும் வேட்டி சேலை வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி , முட்டை என கறி விருந்து பரிமாறப்பட்டது.