கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் காந்தி திடலில் அ.தி.மு.க., சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம். தமிழகத்தில் பத்திரப்பதிவு தங்கதுரை அதிகாரிகளுக்கு கை ஊட்டு கொடுத்தால்தான் பத்திர பதிவை செய்வோம் என பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூச்சம் இன்றி பணம் கேட்கிறார்கள். கொட்டாரம் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு “லஞ்சம்”கேட்டு வாங்கிய பதிவாளர் கையும் களவாக பிடிபட்டார். இப்போது அந்த அதிகாரி நாகர்கோவிலில் பணியாற்றுகிறார் என அதிகாரியின் பெயரை வெளிப்படையாக தெரிவித்த தளவாய் சுந்தரம் தொடர்ந்து, சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சியில் இரண்டு அதி நவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டது. அந்த இரண்டு படகுகளையும், கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிகாரிகள் பயன்படுத்தாது அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் சிலை பாறைக்கு, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் கண்ணாடி இழை பாலம் அமைக்கும் திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் போல் பேசுகிறார். ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு போன்ற உணவு பொருட்கள் கிடைப்பதில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு சற்று கூடுதலான மாதங்களே உள்ளது. குமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பெரும் பான்மை இடங்களில் அதிமுக வெற்றி பெற்று 2026_ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் தளவாய் சுந்தரம் நம்பிக்கையை அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், ஊராட்சி பொருப்பாளர்கள் லீன், பார்த்தசாரதி, தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் டாக்டர். தேவசுதன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம் உட்பட பலர் பொறுப்பாளர்கள் தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
