மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன ஊர் சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ ஜோதி சித்தி கருப்புசாமி, ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ உறங்காப்புலி ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி உற்சவ விழாவை ஒட்டி, முகூர்த்தக்கால் ஊன்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சின்ன ஊர் சேரி கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் கிராம மரியாதக்காரர்கள் செய்திருந்தனர்.