அரியலூர் பிஎன்எம் திருமண மாளிகை யில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் ம.முனியமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பொ.சாமிதுரை பொதுக்குழுவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கோ நல்லுசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப. சுகுமாரன், மாவட்டத் துணைத் தலைவர் த. ராஜீவ் காந்தி, மாவட்ட பிரச்சார செயலாளர் ம. சிலம்பரசன் உள்ளிட்டோர் பொது குழுவிற்கு முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில தலைவர் எம் குமார், மாநில பொதுச் செயலாளர் ஈ இளங்கோவன், மாநில பொருளாளர்எ. கலைச்செல்வன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஏ முருகேசன்,எம் தண்டபாணி, ஈ. ரவிமணி, கே ஜெய்சங்கர், மாநில அமைப்பு செயலாளர் கே கருப்பழகு, மாநில மகளிர் அணி செயலாளர்ஈ சசிகலா, மாநில பிரச்சார செயலாளர் டி அழகர், தலைமை நிலைய செயலாளர் ஆர் திருநாவுக்கரசு, செய்தி தொடர்பாளர் ஏ கோபிநாத், மாநில இணை செயலாளர்கள் கே கண்ணன், ஈ.தசரதன் ஆர் உமா மாலினி, கே பால்பாண்டியன் ஆர். பிரபாகர் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு16(4)(A) வை தமிழ்நாடு அரசு பணிகளில் உடனே நடைமுறைப்படுத்தி குரூப் D பணியிடங்களை மீண்டும் அரசு பணிகளாக்க வேண்டும் ,


கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை 24% சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் ,அரசு பணிகளில் எஸ்சி எஸ்டி பிரிவதற்குரிய பின்னடைவு காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். பொதுக்குழு முடிவில் ரங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் வி ஆர் செந்தில்குமார் நன்றி கூறினார் .




