• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!

Byவிஷா

Mar 29, 2023

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அங்காளம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிகளை செய்து வருகிறது. மிகவும் குறுகலான அந்த இடத்தில் சாலையின் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அப்புறப்படுத்தாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மின்கம்பங்களும் பழமையான புளிய மரங்களும் சாலையின் நடுவே உள்ளது. இதனால் இந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையீட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.