• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் உயர் ரக வைர நகை கண்காட்சி..,

BySeenu

Dec 14, 2025

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், மூன்று நாட்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

இதன் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த வைர நகை கண்காட்சியை தனிஷ்க்-கின் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் இந்த கண்காட்சியை காணக்கூடிய வாடிக்கையாளர்கள், தனிஷ்க் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தனிஷ்க் நிறுவனத்தின் சர்க்கிள் பிசினஸ் மேலாளர் சந்திரசேகர் பேசுகையில்:-

முதல்முறையாக தனிஷ்க் சார்பில் கோவையில் இப்படி ஒரு உயர் மதிப்பு கொண்ட வைர நகைகளின் 3 நாள் கண்காட்சியை நடத்துவதாக கூறினார். இந்த கண்காட்சியின் போது வாங்கப்படும் வைர நகைகளில் 20% வரைக்கும் (வைரத்தின் மதிப்பில் இருந்து)தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

டிசம்பர் மூன்று நாட்களுக்கு தாஜ் விவான்தா ஹோட்டலில் இந்த உயர் ரக வைர நகை கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனிஷ்க்- கின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில், இந்த வைர நகை கண்காட்சிக்கு 1000க்கும் அதிகமான டிசைன்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50% கட்டணத்தை செலுத்தி அந்த நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்துவைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.