• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் – ஸ்டாலின் மகளிர் படை இல்லம் தோறும் பரப்புரை கரும்பாட்டூர் ஊராட்சி, சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர் பாக எண் 325 இல் ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவி தங்கமலர் சிவபெருமான், தென் தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் அகிலா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா முன்னிலையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இப்பரப்புரையில் பாகத்திற்கு உட்பட்ட ஸ்டாலின் மகளிர் படை உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இல்லந்தோறும் பெண்களை சந்தித்து ஸ்டாலின் அரசு பெண்களுக்காக செய்த நலத்திட்டங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டு முதலமைச்சரின் செய்தி வீடியோ காட்டப்பட்டு குறிப்பேடு வழங்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர்கள் சம்மதத்துடன் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.