கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வருகை தந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ” தமிழகத்தினுடைய தற்போதைய நிலை ஊழல், குடும்ப ஆட்சி, இவைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால், தமாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கக்கூடிய நிலை ஏற்பட வேண்டும். அதற்கு நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து சீரிய பணியை ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.
ஜி.கே. வாசனின் குமரி வருகை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சம்மந்தமான கூட்டத்திற்கு குமரி மாவட்ட தமாக மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. அதிகாலை 8.30 மணிக்கே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விட்டு வாசன் புறப்பட்டு சென்று விட்டார். காங்கிரஸ் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர், மீண்டும் காங்கிரஸ் என சேர்த்து விட்ட முன்னாள் தமாகவினரிடம் வாசன் குமரி மாவட்டத்தில் அவரது கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கேட்ட போது, பல காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்த கருத்துகள். ஜி.கே. வாசன் பாஜகவுக்கு செம்பு தூக்கிக் கொண்டு குமரியில் வந்து அவரது லிமிடெட் நிறுவனத்திற்கு உறுப்பினர் சேர்ப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதை போன்றது என இளம் புன்னகை முகத்தில் படர தெரிவித்தார்கள்.