மெக்னிடோவின் புதுமையான கற்றல் மையமான சீட், தமிழ்நாடு கார்டிங் சாம்பியன் ஷிப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 2 துவக்க விழா கோவையில் உள்ள PPG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிரமாண்டமான நடைபெற்றது.
ஸீட், மெக்னிடோ மற்றும் பிபிஜி தொழில்நுட்பக்க கல்லூரி கூட்டாக இந்த நிகழ்வில் பங்குபெற்றனர் பிபிஜி நிறுவனத்தின் துணைத்தலைவர் அக்ஷய் தங்கவேல், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். MECHNIDO இன் CEO அழகர்சாமி ராஜமாணிக்கம், SEED இயக்குநர் சிவா K, ஆகியோர் கௌரவ விருந்தினராக பங்குபெற்றனர். Dr.S.நந்தகுமார் பிபிஜி தொழில்நுட்பக்க கல்லூரி முதல்வர்.கேப்டன் டாக்டர்.அமுதகுமார் பி, பிபிஜி இன்ஸ்டிடியூஷனின் செயல் இயக்குநர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது கோயம்புத்தூரில் உள்ள ப்ரோசோனில் பிப்ரவரி 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு துவங்கியதும், TNKC சீசன் 2 நாடு முழுவதும் உள்ள கார்டிங் ஆர்வலர்களை இந்த போட்டியில் கலந்துகொள்ள அழைக்கிறது, இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உற்சாகமான பயணத்தை உறுதியளிக்கிறது.