• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பயின்ற 1,34,531 பேருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார்…

ByM.Bala murugan

Nov 2, 2023

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் அழைப்பிதழ் உரிய முறையில் அளிக்கப்படவில்லை எனவும்., விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மொத்தம் 1,34,531 மாணவர்களுக்கு பட்டப்படிப்புசான்றிதழ் பெறுகிறார்கள். அவர்களில் 1,33,783 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள்., அதேபோல் பருவத்தேர்வு முறையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைகழக மு.வ.அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 748 பேரு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகவே தனது கைகளால் வழங்கினார். அதில் 602 பேருக்கு Ph.D என்று சொல்லக்கூடிய முனைவர் பட்டமும்., 143 பேர் பதக்கங்கள் பெறுவதற்கும்., ஒருவர் இலக்கிய முனைவர் பட்டமும்., 2 பேர் அறிவியல் முனைவர் பட்டமும் பெறுகின்றனர்.

மொத்தமாக இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 1,34,531 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. காலை -10.45 மணிக்கு காமராஜர் பல்கலைகழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழா மதியம் 2 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டது. மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்திருந்தனர்.

குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை., குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் வெளியில் காக்கவைத்திருந்தனர். ஆளுநர் உள்ளே அரங்கிற்குள் நுழையும் பொழுது எழுந்து நின்று அனைவரும் வரவேற்ற பிறகு ஆளுநர் மேடையில் அமர்ந்த பின்பு தான் மற்றவர்கள் இருக்கையில் அமர்ந்தனர். பிறகு ஆளுநர் வெளியே சென்ற பிறகுதான் விழாவிற்கு வந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியுமான சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகமலைபுதுக்கோட்டை விளக்கு பகுதியில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி, கருப்பு சட்டை மற்றும் பலூன்கள் பறக்க விட்டும் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையம் முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.