• Sun. May 12th, 2024

தேசிய அளவிலான ரோபோ அறிவியல் போட்டியில் மாணவ, மாணவிகள் திறமைகள்..!

BySeenu

Nov 25, 2023
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோபோ அறிவியல் போட்டியில், ரோபோட்டிக்ஸ், ரோபோ சயின்ஸ் குவிஸ், அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ,மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை, புரூக் பீல்ட் வணிக வளாகத்தில் உள்ள பங்கட் அரங்கில், ரோபோ சக்ராஸ் சர்வ வித்யா ஃபெஸ்ட் 2023 என்ற தலைப்பில் தேசிய அளவிலான ரோபோ அறிவியல் போட்டி நடைபெற்றது.. மூன்றாவது எடிஷனாக நடைபெற்ற இதில், ரோபோட்டிக் சவால்கள், விநாடி-வினா, கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு  பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.முன்னதாக இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக, இந்திய விண்வெளி மையத்தின் பவர் சிஸ்ட குழுவின்  முன்னால் இயக்குனர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இதில், ரோபோட்டிக்ஸ், ரோபோ சயின்ஸ் குவிஸ், அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,.மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் ஒரு பகுதியாக, வினாடி வினாவில்  இந்தியாவும், விண்வெளியும் மற்றும் ரோபோ அறிவியல்  என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியை பேராசிரியர் ரங்கராஜன் ஒருங்கிணைத்தார். இதே போல திறன் போட்டியில் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போட்டியில்  நடுவர்களாக ரோகித் வெங்கடாசலம், நீல் துஷார் கிக்கானி ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் அருண் ராஜீவ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர்.  செயற்கை நுண்ணறிவு அறிவியல் குறித்த பயன்களையும்,மாணவ,மாணவிகள் இது குறித்து தெரிந்து கொள்ளும் அவசியம் குறித்தும் எடுத்து கூறினர்.
ரோபோடிக் தொடக்க நிலை பிரிவில், அனன் கிட்ஸ் பள்ளியும், ஜூனியர் பிரிவில்,பி.வி.பி.பள்ளியும்,ரோபோ கோல்ஃபில் வித்யா நிகேதன் பள்ளி ஆகியோர் வெற்றி பெற்றனர்.. அறிவியல் கண்காட்சியில்,ஜூனியர் பிரிவில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, சீனியர் பிரிவு மாநகராட்சி அம்மிணியம்மாள  பள்ளி,வினாடி வினா போட்டியில் பி.எஸ்.பி.பி.பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *