கமல்ஹாசன் என்று பெயர் கடந்த சில நாட்களாக அனைத்து வித அச்சுப்பத்திரிகைகள், ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மூச்சுக் 300_முறை உச்சரிக்கப்பட்டது. தக்லைஃப் க்கு ஒரு பலத்த ஆதரவு பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்ற பொது கருத்தை எல்லாம் “புஷ்”வானம் ஆகிவிட்டது.

நாகர்கோவிலில் கார்த்திக், ராஜேஷ், உட்பட குமரி மாவட்டத்தில் 5_திரை அரங்குகளில் தக்லைஃப் வெளியாகியும். தலைநகர் நாகர்கோவிலில் கூட முதல் காட்சியிலே பெரும்பாலான இருக்கைகள் காலி என்ற நிலையில், மக்கள் நீதிமய்யத்தை சேர்ந்த 10_பேர் இரண்டு வெடி பாக்கெட்டுகள் உடன் வந்து பட்டாஷ் வெடிக்க முயன்றார்கள். காவல்துறை அனுமதி மறுத்ததும், கார்த்திகை திரை அரங்கின் முற்றத்தில் வெடிக்க திரை அரங்கு நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.
கமல்ஹாசனின் அரசியல் நுழைவு முதல் கட்டத்திலே தோல்வி என்ற நிலையிலும் 5%_வீத வாக்குகளை வாங்கிய நிலையிலும். நாட்கள் செல்லச் செல்ல கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறியது. கமல்ஹாசன் ஒரு முழுநேர அரசியலில் வாதியாக உருவாகமல், இடைவேளை அரசியல் நடத்தியவர், அதற்கும் இடைவேளை விட்டு விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாரி அவர் தொடங்கிய அரசியல் இயக்கமான மக்கள் மயத்தை விட்டு, விட்டு,கட்சிக்கும் அவருக்கும ஆன இடைவெளி அதிகரித்தது.

திரைப்பட சம்பந்தப்பட்ட நிகழ்வில் கன்னட நடிகர் பாராட்டு விழாவில். கமல்ஹாசன் எதார்த்தமாக பயன்படுத்திய சொல்லை, கர்நாடகாவை சேர்ந்த ஒரு கூட்டம் பெரிதாக ஊதிய காலக்கட்டத்தில். தக்லைஃப் திரைப்படம் வெளியானது. ஒரு பிரச்சினை ஆக உருவான அதே கால கட்டத்தில் தான். கமல்ஹாசனின் அரசியல் திமுக ஆதராவில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி ஏற்க இருக்கும் சூழலில்.
கமல்ஹாசன் உச்சரித்த வார்த்தைக்கு ‘ மன்னிப்பு’ கேட்க வேண்டும் என கலக காரர்கள் குரலோடு நீதிபதியின் குரலும் சேர்ந்த ஒலியை ஏற்றுக்கொள்ள மறுத்த கமலின் உறுதியை தமிழகத்தில் உள்ள அனைவரும் (பாஜகவினரை தவிர்த்து) அனைவரும் கமலஹாசனை ஒற்றை குரலில் ஆதரித்தது இந்திய முழுவதும் எதிரொலித்ததில் ஒரு அதிர்வலைகளை பார்க்க முடிந்தது.
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா.
கவியரசர் கண்ணதாசனின் பாடலுக்கு. கமல்ஹாசனின்
உறுதி உரம் இட்டுள்ளது.





