• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நிலையான நிதி சேர்க்கை விழிப்புணர்வு நடைப் பயணம்..,

Byமுகமதி

Jan 31, 2026

தானம் அறக்கட்டளை (DHANAM Foundation) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) இணைந்து, “நிலையான நிதி சேர்க்கை (Sustainable Financial Inclusion)” என்ற கருப்பொருளில் Walkathon 2026 எனும் விழிப்புணர்வு நடைப் பயணத்தை 31.01.2026 அன்று மணமேல்குடி பகுதியில் சிறப்பாக நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு நடைப் பயணத்தில் நெய்தல் களஞ்சிய உறுப்பினர்கள் 300 பேர்,
தானம் அறக்கட்டளை பால்க் விரிகுடா மண்டல ஒருங்கிணைப்பாளர் பி. பாலசுப்ரமணியன், மற்றும் பால்க் விரிகுடாப் பகுதியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தென்னரசி, எஸ். சுரேந்திரன், எஸ்.அபிநேஷ்குமார், பி. யோகேஷ், பூ.தினகரன் மற்றும் நெய்தல் களஞ்சியப் பணியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

நெய்தல் களஞ்சியம் உறுப்பினர்கள் 300 பேர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணம், பொதுமக்களிடையே நிலையான நிதி சேர்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்தியது.

நடைப் பயணம் காலை 9.10 மணிக்கு மணமேல்குடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, சுசுமிதா மஹால் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வரவேற்புரை, விளக்க உரைகள் மற்றும் உறுதிமொழி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில்
எம்.டி. ஷஹ்ரேயார், மூத்த மண்டல மேலாளர் (கரைக்குடி பகுதி), டி. நந்தகுமார், மாவட்ட முன்னணி மேலாளர், புதுக்கோட்டை ஸ்டால்வின் R, கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கட்டுமாவடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தானம் அறக்கட்டளை பாக் பே பகுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.பாலசுப்ரமணியன், Walkathon 2026 நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கி, தானம் அறக்கட்டளையின் SCRIPT கட்டமைப்பின் கீழ் உள்ள சேமிப்பு, கடன், திருப்பிச் செலுத்தல், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதை எடுத்துரைத்தார்.

எம்.டி. ஷஹ்ரேயார், பொதுமக்கள் வங்கிச் சேவைகளின் மூலம் பெறக்கூடிய வங்கி நன்மைகள், பாதுகாப்பான பரிவர்த்தனைகள், மற்றும் வங்கி மோசடிகள் (Scam Awareness) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார். டி. நந்தகுமார், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகிய அரசு நிதி பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், வங்கி சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கலின் (Digitization) முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

ஸ்டால்வின் R , சுயஉதவி குழுக்கள் – வங்கி இணைப்பு (SHG–Bank Linkage) குறித்து எடுத்துரைத்து, SHG உறுப்பினர்களுக்கான கடன் வசதிகள் மற்றும் வங்கி சேவைகளின் பயன்களை விளக்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிதி சேர்க்கை முகாம் (Financial Inclusion Camp) நடத்தப்பட்டது. இதில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – அம்மாப்பட்டினம் கிளை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – கட்டுமாவடி கிளை சார்பில் வந்த வங்கி இணைப்பாளர்கள் (BCs) மூலம், சுமார் 60 உறுப்பினர்களுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதுடன், PMSBY மற்றும் PMJJBY காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்யப்பட்டது.

இந்த Walkathon மற்றும் நிதிச் சேர்க்கை முகாம் மூலம், சேமிப்பு, கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற அடிப்படை நிதி சேவைகள் பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவில், அனைவரும் நிலையான நிதி எதிர்காலத்தை உருவாக்கும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.