கோவை மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறது.
கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை முதலில் குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் செம்மொழி பூங்கா திட்டங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் எடுத்து உரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்:-
கோவை மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்து வருகிறோம்.இந்த குழுவினுடைய நோக்கம் தமிழக சட்டப்பேரவையில் அரசு அறிவித்த நலத்திட்டங்கள் அறிவிப்புகள் நிறைவேற்றுவதை குறித்து ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளோம். செம்மொழி பூங்கா பணி தற்போது தொடங்கப்பட்டிருப்பதை ஆய்வு செய்தோம். இந்த பணி தற்போது முதல் கட்டமாக 45 ஏக்கர் பரம்பரையில் 167 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இது தற்போது 40% பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவ்வப்போது இந்த ஆய்வு நடத்தப்படும்.தமிழக முதலமைச்சர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகின்ற வகையில் இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது என்பதை குழு உறுதி செய்து, தொடர்ந்து காந்திபுரத்தில் காவலர்களுக்கான ஒரு 54 கோடி மதிப்பில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீராவி சலவை எந்திரம் அமைக்கும் பணி,250 கோடி ரூபாயில் மேற்கு புறவழிச்சாலை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடம்,மருதமலை கோவிலில் 5.20 கோடி ரூபாயில் ரோப் கார் வசதி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
