• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வண்ண நூலில் உருவாக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் ஓவியம் !!!

BySeenu

Mar 27, 2025

கோவை மாவட்டம், கருண்யா நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஓவியம் மீது ஆர்வம் கொண்டதால் மரத் தூள்கள் காய் கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கை பொருட்கள் கொண்டு ஓவியம் வரைந்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓவியங்களை வரைந்து வருகிறார்.

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்கியிருந்து கடந்த மார்ச் 18 – ம் தேதி வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

அவரது சிறப்பான சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பதினைந்து மணி நேரத்தில், இரண்டு அடிக்கு, இரண்டு அடி வண்ண நூலில் உருவப்படத்தை ஓவியர் ரேவதி சௌந்தர்ராஜன் உருவாக்கி உள்ளார்.