மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பூந்தோட்ட நகரில் குடியிருக்கும் கண்ணன் என்பவரது மகன் பொக்கு சிவா என்ற சிவக்குமார்(19) நள்ளிரவில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் திரிந்ததாக தகவல் அறிந்து காவல்துறையினர்சிவாவை பிடிப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தன்னை பிடிக்க வருவதை அறிந்த பொக்கு சிவா தப்பி ஓடி அருகில் இருந்த அயன் பாப்பாகுடி கண்மாயில் இறங்கி தன்னை பிடிக்க வந்தால் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவேன் எனக் கூறி கண்மாயில் ஆகாயதாமரை நிறைந்த பகுதியில் நின்றுகொண்டு என்று போலீசாரை பார்த்து மிரட்டினார். வெகுநேரமாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய சமாதானமாகாமல் தண்ணீருக்குள்ளையே நின்றுள்ளார்.இதனால் அப்பகுதிக்கு பிரியாணிக்கு வாகனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து கண்மாயிலிருந்து வெளிவராத பொக்கு சிவாவின் தாயார் மீனாட்சியை வரவழைத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சமாதானம் பேசிபோலீசார் எதுவும் செய்ய மாட்டார்கள் என சமாதானம் செய்து பொக்கு சிவாவை கண்மாயிலிருந்து வெளிவர செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆயுதம் வைத்திருந்த நபரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது போலீசாருக்கு போக்கு காட்டி கண்மாய்க்குள் இறங்கி தற்கொலை மிரட்டல் விடுப்பு அட்ராசிட்டி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.