தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எஸ்.எம்.ஏ நகரில் வசித்து வந்தவர் சண்முகநாதன்
வயது -50, இவர் தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மனைவி ஒரு மகன்,ஒரு மகள் இருந்து வந்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை மற்றும் கடன் தொல்லையால் இருந்துள்ளார் . இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகநாதன் வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சண்முகநாதன் தந்தையார் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.