திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரியில் அட்டுவம்பட்டி என்னும் பகுதியில் அமைந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் திறந்து உள்ள நிலையில் கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசு மகளிர் கல்லூரியில் குறைந்த அளவு மாணவிகள் சேர்க்கை இருக்கும் காரணத்தினால் அதற்கு முக்கிய காரணமாக சரியான தங்கும் விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதாக என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அன்னை தெரசா மகளிர் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு கல்லூரிகளுக்கும் தங்கும் விடுதிகளுக்கு பயன்படுத்தும் கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் காணப்பட்டதால் அப்பகுதியில் வில்பட்டி பஞ்சாயத்து மூலம் இரண்டு குழாய்கள் அமைத்து குடி தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள விடுதியை பார்வையிட்டு அரசு மகளிர் கல்லூரிக்கு வரும் பிற மாணவியருக்கும் வசதிகள் ஏற்படுத்தி மாணவிகளை உள்ளே அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவியர்கள் பயிலும் பாடங்கள் மற்றும் அவர்கள் செய்துள்ள அசைன்மென்ட் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து விடுதியில் அமைந்துள்ள மாணவிகள் படிக்கும் அறைகளில் நாற்காலிகள் மற்றும் மேஜைகள், நவீன முறையில் பயில்வதற்கு ப்ரொஜெக்டர் போன்ற பல ஏற்பாடுகளை அமைப்பதற்கு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.