• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி…

Byமதி

Oct 28, 2021

இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிற இந்த நிலையில், இந்தியாவின் இந்த சோதனை வெற்றி அவர்களை சற்றே அச்சுருத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சீனாவின் கிழக்கு பகுதிகளை தாக்கும் திறன் இந்தியாவிடம் இல்லை. ஆனால் தற்போது, அக்னி 5 ஏவுகணை மூலம் சீனாவின் எந்த எல்லை பகுதியையும், எந்த நகரத்தையும் தாக்க முடியும். இதனால்தான் சீனா ஆரம்பம் முதலே இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்தது.