• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகை அருகே செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு

ByR. Vijay

Mar 1, 2025
நாகை அருகே செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள்  பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மருத்துவ சேவையை போற்றும் விதமாக ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மருத்துவ சேவையை போற்றும் விதமாகவும், அவரின் சேவையை பின்பற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 200க்கும் மேற்பட்ட  செவிலிய பயற்சி  மாணவிகள் ஒரே நேரத்தில் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நவீன செவிலியர் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், ஆடம்பரங்களை விட சமூகப் பொறுப்புகளையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும், தொற்றுநோய் சூழ்நிலையில் செவிலியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் மற்றும் தங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் மருத்துவ சேவையை நினைவு கூர்ந்து நாங்களும், சிறப்பாக சேவையாற்றுவோம் எனும் கல்லூரி மாணவிகள் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் நடராஜன், செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.