அரியலூர், அரியலூர் மாவட்டம், தேளூர் ஊராட்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் ரூ3.60 கோடி மதிப்பீட்டில் , புதிதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்பு கிடங்கினை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சென்னை ,தலைமைச் செயலகத் திலிருந்து காணொளி காட்சி வாயிலாக,திறந்துவைத்தார்.

அதனையொட்டி , தேளூர் சேமிப்பு கிடங்கில் நடைபெற்ற காணொளி காட்சி , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்ன ப்பா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குத்து விளக்கினை ஏற்றி,சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் ஜி. தமிழ்ச்செல்வி, சேமிப்பு கிடங்கு மேலாளர்கள் வி பாலசுப்பிர மணியன்(திருச்சி), சிவகார்த்திகேயன் (தஞ்சாவூர்),மதிமுக மாவட்ட செயலாளர் இராமநாதன்,அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி .சங்கர், ஒப்பந்ததாரர் கே. மோகனசுந்தரம், கன்ஸ்டிரக்ஷன் பொறியாளர் பிஜெயபால்,தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன பொறியாளர் கோபிகிருஷ்ணன், முன்னாள் தேளூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் தியாகராஜன், மண்ணுழி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.