• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடையாள அட்டை இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம்..!

Byமதி

Oct 28, 2021

உரிய அடையாள அட்டையின்றி பத்திரிகையாளர், வழக்கறிஞர், போலீஸ் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு வலம் வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, அந்த ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர்.
சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

அதேபோல், போலி அடையாள அட்டையுடன், போலீஸ், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என பலரும், தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவதாக புகார் எழுந்ததையடுத்து, போக்குவரத்து போலீசார், சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். உரிய அடையாள அட்டையின்றி, ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் இருந்து, அவ்வகை ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. நேற்று, மயிலாப்பூர் போலீசார், லஸ் சர்ஸ் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அடையாள அட்டையின்றி போலீஸ், வழக்கறிஞர், பத்திரிகையாளர் என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, உடனடியாக ஸ்டிக்கரை அகற்றினர்.