கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஆசனங்களை செய்து அசத்தினர்.

யோகா குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நானா யோகா ஸ்டுடியோ மற்றும் ஓசோன் யோகா மையம் சார்பாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
ஜூனியர்,சப் ஜூனியர்,ஓபன் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கோவை,திருப்பூர்,நீலகிரி,சேலம்,கன்னியாகுமரி,சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் சிரசாசனம்,சக்ராசனம், , திரிகோண ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான கடினமான ஆசனங்கள் செய்து அசத்தினர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் அடுத்ததாக நடைபெற உள்ள சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராமன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்..













; ?>)
; ?>)
; ?>)