• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது..,

BySeenu

May 28, 2025

சர்வதேச அளவில் பிரிமியர் ஃபர்னிச்சர் தயாரிப்பில் பிரபலமான ஹோம்ஸ் டூ லைஃப் (HomesToLife), நிறுவனம் தமிழகத்தில் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது.

சிங்கப்பூரில் தலைமையாக கொண்டு சர்வதேச அளவில் பர்னிச்சர் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக ஹோம்ஸ் டூ லைஃப்(HomesToLife) இயங்கி வருகிறது.

பிரிமியர் வகை ஃபர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பில் சுமார் ஐம்பது வருடங்கள் பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனம் , நவீன வாழ்க்கைக்கேற்ப வசதியும் அழகும் இணைந்த நவீன சோபாக்களை உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது விற்பனை மையத்தை கொண்டுள்ள இந்நிறுவனம் தமிழகத்தில் தனது முதல் அங்கீகரிக்கப்பட்ட கிளையாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் தனது விற்பனை மையத்தை துவங்கி உள்ளனர்.

இதற்கான துவக்க விழாவில் ஹோம்ஸ் டூ லைஃப் நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் தலைவர் செலஸ்ட் புவா மற்றும் தேசிய தலைவர் வருண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கவுரவ விருந்தினராக தொழிலதிபர் ராஜ் குமார் கலந்து கொண்டார்.

ஹோம்ஸ் டூ லைஃப் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஹோம் ஸ்டோ மையத்தின் நிர்வாக இயக்குனர் ரகுபதி மற்றும் நிறுவன நிர்வாகிகள் பேசுகையில்,வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான உயர்தர பர்னிச்சர்களை விற்பனை செய்வதில் சர்வதேச அளவில் முன்னனி பிராண்டான ஹோம்ஸ் டூ லைஃப் கோவையில் துவங்கி உள்ளதாகவும்,எங்களது ஷோரூமில், வீடுகளுக்கு தேவையான,ஆடம்பரமான டிசைன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் பல்வேறு வகையான சோபா டிசைன்கள் இருப்பதாக தெரிவித்தனர்..

கைவினைப் பொருட்களால் செய்யப்பட்ட சோஃபாக்கள் மற்றும் சாய்வான டைனிங் மேசைகள்,கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் வரை, ஒவ்வொரு தயாரிப்பும் தரம் மற்றும் அதே நேரத்தில் நியாயமான விலையில் வழங்குவதாக குறிப்பிட்டனர்.