மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இரணியம் ஊராட்சியில்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமை மதுரை ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அரவிந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வடக்கு வட்டாட்சியர் மஸ்தான்கனி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ் மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சிபிரேமா, பொற்செல்வி,மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரி சமயநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பத்மாவதி,நடமாடும் மருத்துவமனை மருத்துவர் முத்துமாரி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி ஊராட்சி செயலாளர் சிவகுமார் மற்றும் திமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நேருபாண்டியன் மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் மாவட்ட துணைச் செயலாளர் ஆசைகண்ணன் மாவட்ட பிரதிநிதி ராஜா,மலைவீரன் மோகன் காவல்துறைஅதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் திமுக கழக நிர்வாகிகள், ஊரக ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்,

இந்த திட்ட முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, எரிசக்தி துறை தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, காவல் துறை ஆகிய துறை சார்ந்த அரங்குகளில்
இரணியும் உட்பட சுற்றுவட்டார ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக செலுத்தினார்கள்,