• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை தஞ்சை எம்பி முரசொலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கான சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சைகளும், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய எம் பி முரசொலி கூறியதாவது..

தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் ஒன்றுதான் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று ஏராளமான ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்கள் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து மற்றும் ஆலோசனைகளை பெற்று தங்கள் உடல் பாதுகாப்பதற்கு பெரிதும் ஆர்வத்தோடு பங்கெடுத்து வருகின்றனர்.

முதலமைச்சரின் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை போல் மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு மக்கள் பெற்றிட இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மக்களின் எண்ண ஓட்டங்களை சிறப்போடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் அவர்களின் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று ஒரத்தநாட்டில் தொடங்கப்பட்டு முகாம் நடைபெற்று வருகிறது ஆயிர கணக்கான பொதுமக்கள் கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் இருந்து கலந்துகொண்டு தங்கள் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்து மற்றும் மாத்திரைகள் ஆலோசனைகள் உடல் பரிசோதனைகளை செய்து பயன்பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பட்ட நோய்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் மருந்துகளை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் , ஒரத்தநாடு அரசு தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜா ராம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.