கன்னியாகுமரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவடைந்த நிலையில் 16, 17 மற்றும் 18 ஆவது வார்டுகளுக்கான இறுதி கட்ட முகாம் நடைபெற்றது.

இதில், இந்த வார்டுகளுக்கு உள்பட்ட புதுக்கிராமம், வாவத்துறை, கன்னியாகுமரி ரதவீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். இந்த முகாமில், துறை ரீதியாக அதிகாரிகளால் மனுக்கள் பெறப்பட்டன. ஒரு சில பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விதைப்பைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை வழங்கப்பட்டது. இம்முகாமில், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் கந்தசாமி பங்கேற்று சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி, நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன், கவுன்சிலர்கள் டெல்பின் ஜேக்கப், ஆட்லின் சேகர், எம்.பூலோகராஜா, சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




