நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோர்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஐந்தாவது நாளான இன்று சுவாமி வீதியுலா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னடியார், காத்தவராயன், விநாயகர், முருகன், சீராளம்மன் ஆகிய பரிவார சாமிகளுடன் ஸ்ரீமுத்து மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
