புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பௌர்ணமி நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டு வண்டியில் சாமி வீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மிகப் பழமையான ஆலயமாகவும் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி முதல் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று மிகப் பழமை மாறாத வழக்கம்படி மாட்டு வண்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி தெய்வங்களான விநாயகர் சுப்பிரமணியர் சுந்தரேஷ்வரர் மீனாட்சியம்மன் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் வீதி உலா மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது பெண்கள் தங்களது வீடுகளில் சுப நிகழ்வு நடைபெற தேங்காய் உடைத்து வழிபட்டனர்.