• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் கலசாபிஷேக விழா..,

ByR. Vijay

Jul 28, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி கிராமத்தில் எல்லை, காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு பூரண புஷ்கலாம்பாள் உடனுரை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் கடந்த 2024 ம் ஆண்டு ஆரம்பித்து ஒரு வருட காலமாக கிராத சாஸ்தா சஹஸ்ராம பாராயணமும், கடந்த ஒரு மாத காலமாக ஹோமம் நடைப்பெற்று வந்தது. அதன் நிறைவு வைபவமாக இன்று 1008 கலாசாபிஷேகம் நடைப்பெற்றது. கலாசாபிஷேக விழாவானது கடந்த 26 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதணை நடைப்பெற்று வந்தது.

இன்று கோ பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி சுவாமிகளுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு திரவிய சமர்ப்பணம் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி தீபாராதணை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 1008 கலாசாபிஷகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் சுமந்துவந்த புனிதநீரைக்கொண்டு வேதமந்திரம் ஒலிக்க மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.