• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை துடியலூர் பகுதியில் விளையாட்டு தின விழா..!

BySeenu

Jan 6, 2024
கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் கல்லூரியின் விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.மருத்துமனையின் ஒரு அங்கமாக வி.ஜி.பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியின் விளையாட்டு தின விழா, மருத்துவமனை எதிரில் உள்ள மைதானத்தில்  நடைபெற்றது. 
வி.ஜி.குழுமங்களின் தலைவர் மருத்துவர் வெங்கடேஷ் மற்றும்  அறங்காவலர் ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு தின விழாவில், கல்லூரியின் முதல்வர் ருக்மணி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ராஜராஜன், கௌரவ அழைப்பாளராக மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் தர்ம சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
விழாவில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து டென்னிஸ், கைப்பந்து போன்ற உள் விளையாட்டு அரங்கில் சிறந்து விளையாடிய மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரபடுத்தினர். தொடர்ந்து கால்பந்து, ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில் வி.ஜி.மருத்துவமனையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.