• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சைக்கான தனி பிரிவு

BySeenu

Aug 20, 2024

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனை தனது சேவையை விரிவு படுத்தும் விதமாக இரைப்பை குடல் சிகிச்சைக்கான தனி பிரிவை துவக்கியது.

கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் அனைத்து வசதிகளும் கொண்ட முன்னணி மருத்துவமனையாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தற்போது தனது சேவைகளை விரிவு படுத்தும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் பயன் பெறும் வகையில் இரைப்பை குடல் (Gastroenterology) பிரிவை துவக்கி உள்ளது.
முன்னதாக புதிய இரைப்பை குடல் நோய் குறித்த ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவை ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்கள் ராவ்,ஆஷா ராவ், இணை இயக்குனர் தாமோதர் ராவ் மற்றும் இரைப்பை குடல், லாபரோஸ்கோபி மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் ராதாகிருஷ்ணன்,மருத்துவர் விகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

புதிய இரைப்பை குடல் நோய் சிகிச்சை பிரிவு குறித்து மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன், விகாஷ் மற்றும் தாமோதர் ராவ் ஆகியோர் பேசுகையில்,

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 5 பேரில் ஒருவர் கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் (Gastrointestinal) குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மக்கள்தொகையில் 40% செரிமான குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தற்போது இந்த பிரிவில் அதிக சிகிச்சை முறைகள் தேவைப்படுவதால் ராவ். மருத்துவமனை தனது சேவையை இரைப்பை குடல் நோய் சிகிச்சையில் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

இரைப்பை குடல் நோய் தொடர்பான அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ராவ் மருத்துவமனையில் இந்த புதிய பிரிவு செயல்படும் எனவும்,
,அனுபவம் வாய்ந்த சிகிச்சை நிபுணர்களை கொண்டு நவீன தொழில் நுட்பங்களுடன் இரைப்பை குடல் நோய் சிகிச்சைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தீர்வு காண முடியும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.