நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெற்றோரின் கண் முன்னே மூன்று வயது சிறுமியை கடத்திய ஆட்டோ ஓட்டுனர். எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படை அமைத்து நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரவு நாகர்கோவில் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பார்வதிபுரம் அருகே காட்டுப் பகுதியில் குழந்தையுடன் பதுங்கி இருந்த ஆட்டோ ஓட்டுனர் யோகேஷ் குமார் என்பவரை கைது செய்து குழந்தையை அதிரடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தப்பட்ட நான்கு மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக செயல்பட்டு குழந்தையை மீட்டது குறிப்பிடத்தக்கது.





