• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை தனிப்படையினர் கைது..,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் திருடி சென்றனர் பின்பு புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கர் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் தலைமை காவலர் அமுதன் ஆகியோர் சேர்ந்த தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகனத்தை திருடிய வாலிபர்களை தேடிய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சபரி(25) மற்றும் நிகாஷ் நசீர் (25)ஆகியோரை தனிப்படையினர் இன்று கைது செய்து விசாரணை.தழிகம் முழுவதும் பல வழக்கு இவர்கள் மீது பதிவு செய்தது தெரியவந்துள்ளது.