• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

“சிறப்பு கலந்தாய்வு” கூட்டம்..,

ByE.Sathyamurthy

Jul 18, 2025

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி 37-ம், ஆண்டு தொடக்க விழா மற்றும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மகளிர் மாநாடு பங்கேற்பது, தொடர்பான “சிறப்பு கலந்தாய்வு” ஆலோசனை, கூட்டம் பாமக மாவட்ட செயலாளர், ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி கே.பி.என். ரவிசங்கர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி முன்னதாக மாவட்டச் செயலாளர், அவர்கள் தலைமையில் மீன்சுருட்டி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாநில வன்னியர் சங்க தலைவர், ஜெயங்கொண்டம் (முன்னாள்) சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு அவர்களின் மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை, அணிவித்து மரியாதை செய்தார்கள். அதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர், தலைமையில் பூம்புகாரில் நடக்க இருக்கும் மகளிர் மாநாட்டிற்கு அரியலூர் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சொந்தங்கள் சார்பாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிப்பது தொடர்பாக சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் காடுவெட்டியில் உள்ள (தனி வீடு) மாவட்ட செயலாளர், அவர்கள் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பெண்கள் தாய்மார்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் அதற்கான பாமக நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாநாட்டிற்கு பங்கேற்பது தொடர்பான விபரங்களை உறுதி செய்து, பயணங்கள் பாதுகாப்பாக, சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக வழிமுறைகளை மாவட்ட செயலாளர், அவர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திருமாவளவன், மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் தங்க.ராமசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி, மாநில பேச்சாளர் அய்யாதுரை ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறப்பு கலந்தாய்வு” கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் செம்மலை நகரச் செயலாளர் அருள் ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், தா.பழூர் ஒன்றிய செயலாளர் குமணன், பரமசிவம், இளவரசர் செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஒன்றிய தலைவர் வினோத், செல்வகுமார், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சொந்தங்கள் சுமார் 300-க்கும், மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.