திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் பிளட் மூனை கண்டு களிக்கலாம்.
இன்று வானில் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திரகிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. அப்போது நிலா சிவப்பு நிறத்தில் மாறும் வாய்ப்புள்ளது.
இதை முன்னிட்டு ராட்சத தொலைநோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.
வான் இயற்பியல் ஆய்வாக நுழைவு கட்டணம் இன்று இரவு மட்டும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முழு சந்திர கிரகணமானது தென்படுகிறது. வெறும் கண்களால் பார்க்க முடியும். இது குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். சந்திரன் மாறுபடும் நிறத்தை குறித்து ஆய்வு நடத்துகின்றனர்.