மதுரையில் உள்ள கோயில்களில், தேய்பிறை பஞ்சமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மர் மற்றும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரையில் உள்ள தாசில நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் விழா ஆலயம், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை ஒட்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தாசில்தார் நகர் சௌபாக்கிய விழா ஆலயம் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், உள்ள யோக நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷே அர்ச்சணை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வராகி அம்மன் சன்னதியில் சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து நவகிரக ஹோமம் நடைபெற்றது. பக்தர்களால் வராகி அம்மனுக்கு, பால், தயிர், இளநீர் ,மஞ்சள் பொடி ஆகிய அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரமாகி பக்தர்கள் மஞ்சள் மாலை அணிவித்தனர். நரசிம்மருக்கு பானகம் மற்றும் பிரசாதங்கள் படைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர். சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள வராகி அம்மனுக்கு மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்களில் காலை 9 மணி அளவில் சிறப்பு ஹோமமும், அதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.