விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் அருள் பாலித்திருக்கும் கால பைரவுக்கு தொழில் அபிவிருத்திக்காக காலபைரவருக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடமலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
