• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு..!

BySeenu

Dec 13, 2023
கோவை விமானநிலையத்தில், தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது..,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர்  கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி இருக்கின்றது. பல பேர் குறைசொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சைப் படுத்துவதை போன்றது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு  உதவிகள் செய்யப்பட்டுள்ளது. நிவாரண நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர். அவரிடம் சொல்லி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசினார்.