• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தந்தையை ஏமாற்றி சொத்தை அபகரித்த மகன்

BySeenu

Apr 21, 2025

96 வயதான தந்தையை கொடுமை செய்து சித்தரவதை செய்து, ஏமாற்றி சொத்தை அபகரித்த மூத்த மகன் மீது, தந்தையை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, இளைய மகன் புகார் அளிக்க செய்தார்.

கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நிலையில், இவர் சூலூர் பகுதியில் தனியாக இல்லத்தில் வசித்து வருகிறார். ஜெயக்குமார் இவரது இல்லத்தின் அருகில் வேறொரு இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சரஸ்வதி வேறு இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பழனிச்சாமிக்கு சொந்தமான சுமார் 2.1/4 செண்ட் நிலத்தை ஜெயக்குமார் தங்களுக்கு எழுதி தர வேண்டுமென முதியவர் பழனிச்சாமியை மிரட்டியதாகவும், உணவையும் சரிவர அளிக்காமல் சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனிச்சாமியை மகள் சரஸ்வதி, அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று கவனித்து கொண்டுள்ளார். சிறிது நாட்களில் சரஸ்வதிக்கு இல்ல பராமரிப்பு பணிகள் இருந்ததால் மீண்டும் பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கே அழைத்து வந்து விட்டுள்ளார். இதனிடையே ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் கீர்த்தனா மோசடி செய்து அந்த இடத்தை வாங்கிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பழனிச்சாமியின் இளையமகன் வேல்முருகன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, மோசடி செய்து அவர்கள் வாங்கி கொண்ட நிலத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு அளிக்க செய்தார்.