• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர்- தெலங்கானா முதல்வர்

ByA.Tamilselvan

Apr 28, 2022

மாநிலங்களுக்கு அளுநர்கள்தேவையில்லை.ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசியுள்ளார்.
தமிழகம்,கேரளா,தெலுங்கானா,மேற்குவங்கம் உள்ளிட்ட பா.ஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் தனியச்சையாக செலுபடுவதாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என சந்திரசேகரராவ் பேசியிருப்பது முக்கியதுவம் வாய்ந்தாகும்
ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
ஆளுநர் பதவியால் மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமாராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில முதல்வர் 12 எம்எல்சிக்களை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களிலும் இதுபோன்ற பஞ்சாயத்துகளே நடக்கின்றன. நாட்டில் புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும். இதற்கு டிஆர்எஸ் உறுதுணையாக இருக்கும். நாட்டின் அரசியல் சூழல் மீது கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். தேசப்பிதா காந்தியை சுட்டுக் கொன்றவனை வழிபடுவது கொடுமையிலும்கொடுமை. மத அரசியல் நடத்தி நாட்டை எவ்வழியில் அழைத்து செல்கிறார்களோ எனும் அச்சம் ஏற்படுகிறது.
இவ்வாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.