தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பதினாறாவது மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச யோகா போட்டியில் விருதுகளைப் பெற்றுள்ள ஜெயவர்தினி, இவர் கம்போடியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். யோகா மாணவி ஜெயவர்த்தினிக்கும், இந்திய குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆலங்குளம் கிளை தலைவர் வெல்கம் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.