• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறை

ByKalamegam Viswanathan

Mar 28, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி நெருக்கமாக பழகி வந்த விக்னேஷ்வரன் அதனை புகைப்படங்களாக எடுத்துள்ளார். பின்னர் சிறுமியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுமி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது வீட்டில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, போக்சோ சட்டத்தில் விக்னேஷ்வரனை கைது செய்தனர். சம்பவம் குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி விக்னேஷ்வரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.