• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

ByG.Suresh

Feb 17, 2024

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1500 கழக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் திமுக சாா்பில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மூத்த முன்னோடிகளை கெளரவிக்கும் விதமாக மாவட்டத்தில் 1500 . பேருக்கு பொற்கிழி மற்றும் பரிசு தொகையை வழங்கினார். சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் முன்னாள் அமைச்சர் தென்னவன் MLA தமிழரசி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 1,500 பேருக்கு ரொக்கம், வெள்ளி பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கினார். உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வெள்ளி செங்கலும் மாவட்ட திமுக சார்பில் வழங்கப்பட்டது.