• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு !!! குடிநீர் வீணாகிறது !!!

BySeenu

Jun 20, 2025

கோவை மாநகராட்சிக்கு வரும் சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது.

கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் இடையே கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் சாலையோரம் இருந்த மரத்தை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அதில் மரத்தின் அடியில் சென்று கொண்டு இருந்த சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. ராட்சதக் குழாயில் ஏற்பட்ட பெரிய உடைப்பு காரணமாக தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதால் சாலையில் குடிநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து வீணாகி வருவதால், கோவை மாநகராட்சி பொதுமக்கள் கலக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக சிறுவாணி அணை முழுமையாக நிரம்பாத நிலையில் கோவை மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி குடிநீர் சாலையில் வீணாவது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில் அதிகாரிகள் விரைந்து உடைப்பை சரி செய்து, முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.